ஆங்சான்சுகிக்கு ஐரோப்பிய யூனியன் பரிசு வழங்கல்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஸ்ட்ராஸ்பர்க், அக்.24 - 23 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் பரிசை மியான்மரைச் சேர்ந்த ஆங்சான்சுகி பெற்றுக் கொண்டார். 

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு ஜனநாயகத்தை கொண்டுவர போராடி வந்த  ஆங்சான்சுகி 15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த 2010_ம் ஆண்டு அவரை ராணுவ ஆட்சியாளர்கள் விடுதலை செய்தனர். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் அவரது  ஜனநாயக தேசிய லீக் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள அவர் நோபல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 

கடந்த 1990_ம் ஆண்டில் அவருக்கு ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகளுக்கான சகாரோவ் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் மியான்மர் நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவரால் பரிசை பெற்றுக்கொள்ள  இயலவில்லை. தற்போது விடுதலையாகி உள்ள அவர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று பரிசை பெற்றுக்கொண்டார். அவருக்கு சகாரோவ் பரிசை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ் வழங்கினார். 

மியான்மரில் தற்போது அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக வரமுடியும்.  ஆனால் அந்த நாட்டு சட்டப்படி வெளிநாட்டுக் காரரை திருமணம்  செய்தவர்கள் அதிபராக வரமுடியாது. இவரது கணவர் இங்கிலாந்து நாட்டுக்காரர். இவர் இறந்துவிட்டார். இந்த நாட்டு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று இவரது கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

        

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: