முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ.யிடம் கோப்புகளை ஒப்படைத்தது பிரதமர் அலுவலகம்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 27 - ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.கோரிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் ஒப்படைத்துள்ளது. 

கோப்புகளை சி.பி.ஐயிடம் ஒப்படைத்ததற்கான ரசீதை பெற்றுக் கொண்டதாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2005 ம் ஆண்டு தலாபிரா சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அத்துறையின் முன்னாள் செயலர் பரேக் ஆகியோர் மீது அண்மையில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. தகுதியின் அடிப்படையிலேயே அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. கோரும் தகவல்களை வழங்க தயாராக உள்ளோம் என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. தன்னை சதிகாரர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டினால் நிலக்கரி சுரங்கம் ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்த அந்த துறையின் முந்தைய அமைச்சர் பொறுப்பை வகித்த பிரதமர் மன்மோகன்சிங்கும் சதிகாரராக சேர்க்கப்பட வேண்டும் என்று பரேக் குற்றம் சாட்டினார். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனிடையே ரஷ்ய, சீனா பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை. சி.பி.ஐ. யின் விசாரணையை சந்திக்க தயார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்