முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி பேரணியில் போலீசார் சுட்டதில் 5 பேர் பலி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, அக். 27 - வங்க தேசத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காபந்து அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதை வலியுறுத்தி நாடு முழுவதும் அக்கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. 

டாக்காவில் அக்கட்சியின் தலைவர் ஹலிதா ஜியா உரையாற்றினார். பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பல இடங்களில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் சுட்டதில் 2 பேர் பலியாயினர். ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஜல்தாஹா நகரில் போலீசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவங்களில் கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்