முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக். 27 - 7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த 6 ஆண்டுகளாக லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு புதிய சூரிய குடும்பத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் 7 கிரகங்கள் உள்ளன. 5 கிரகங்கள் தெளிவாக தெரிகின்றன. இது தவிர மிக சிறிய கிரகங்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்