உணவு தானியங்கள் வீனாகுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

SupremeCourt 4

புதுடெல்லி,மே.15 - நாட்டில் உணவு தான்யங்கள் வீனாகுவதற்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் அறுவடை காலத்தில் உணவு தான்யங்கள் அதிக அளவில் உற்பத்தி இருக்கும். இந்த தான்யங்களை சேமித்து வைக்க போதுமான கிட்டங்கி வசதிகள் இல்லாததால் சுமார் 20 சதவீதம் வரை உணவுதான்யங்கள் கெட்டுப்போகின்ற. இது மிகப்பெரிய இழப்பாகும். நாட்டில் ஒரு பிரிவினர் 3 வேலைக்கு உணவு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். பட்டினியை போக்க உணவு தான்ய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதேசமயத்தில் உணவுதான்யங்கள் வீணாகுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கருதுகிறது. இந்தாண்டு பருவமழை காலம் கடந்து தொடங்கினாலும் நல்ல மழை பெய்தது. அதனால் உணவுதான்ய உற்பத்தியும் அதிக அளவில் இருக்கும் என்று எதிரப்பார்க்கப்படுகிறது. இந்த உணவுதான்யத்தை பத்திரமாக சேமித்து வைத்து மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்தாண்டு பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைவாக இறப்பு என்ற செய்தியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளை சுப்ரீம்கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 150 பிற்பட்ட மாவட்டங்களில் 50 லட்சம் டன் உணவுதான்யத்தை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என்று மத்திய,மாநில அரசுக்கு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. பொது விநியோகத்திற்காக மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள உணவுதான்யங்களை எடுத்துச்செல்லுமாறு மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பத்துள்ளது. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து கண்காணிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி டி.பி.வத்வா தலைமையில் ஒரு கமிட்டியையும் சுப்ரீம்கோர்ட்டு நியமித்துள்ளது. நாட்டில் பொதுவிநியோக முறையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் சிவில் உரிமைக்கான மக்கள் அமைப்பு சார்பாக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி இந்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ