முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் தீவிரவாதிகள் 95 பேர் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மைடுகுரி, அக்.28 - நைஜீரியாவில் தீவிரவாதிகள் 90 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடகிழக்கு நைஜீரியாவில் ராணுவம் போஹோ ஹராம் தீவிரவாதிகளுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 90 தீவிரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதுபற்றி நைஜீரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது டோல் கூறியதாவது: நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். போர்னோ மாவட்டத்தில் உள்ள தீவிவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்றார்.

ராணுவத் தாக்குதலில் டாமடுவருக்கு தப்பி ஓடிய 25 தீவி"வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று ஜெனரல் இப்ராஹிம் தெரிவித்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்