முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால் மசூதி வழக்கு: முஷாரப் காவல் நீடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.28 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு லால் மசூதி தாக்குதல் வழக்கில் வரும் 30_ம் தேதி வரை காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கடந்த 2007_ம் ஆண்டு லால் மசூதியில் தங்கி இருந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராமுவத்தினர் தாக்குதல் நடத்த அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் உத்தரவிட்டார்.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய மத குரு அப்துல் ரஷீத் மற்றும் அவரது தாய் உள்பட 100_க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பலர் தீவிரவாதிகள்ஆவர். இந்த வழக்கு உள்பட பல வழக்குகளில் முஷாரபை கைது செய்து கடந்த 6 மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மசூதி தாக்குதல்  வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதில் வரும் 30_ம் தேதிவரை அவருக்கு காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணை நவம்பர் மாதம் 8_ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்