முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் விவகாரத்தில் சி.பி.ஐ. மவுனம் ஏன்? மோடி கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

உதய்பூர், அக். 28 - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும் சதிகாரர் என்று அந்த துறையின் முன்னாள் செயலர் பரேக் குற்றம் சாட்டிய பின்னரும் பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்ததை போல் சி.பி.ஐ. வாயடைத்து போய் உள்ளது என்று பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வேளை எனக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தால் சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் என்றும் மோடி கூறினார். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.யை சாதகமாக பயன்படுத்தி வருகிறது. ஆளும் கட்சிக்கு எதிரானவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் சி.பி.ஐ.யை மத்திய அரசு ஈடுபடுத்தி வருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக முன்னாள் மூத்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். அதில் இருந்து அரசை காப்பாற்ற சிலர் இரவும், பகலுமாக பணி செய்து வருகின்றனர். இது போன்ற ஒரு குற்றச்சாட்டு என் மீதோ, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தால் சி.பி.ஐ. அடுத்த நிமிடமே எங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும். 

ஆனால் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தது போல் சி.பி.ஐ. மவுனமாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் முறைகேடுகள் அனைத்தும் வெளிப்படுத்தப்படும். மத சார்பின்மை குறித்து நாடு முழுவதும் ராகுல் பேசி வருகிறார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 20 க்கும் மேற்பட்ட மத கலவரங்களுக்காக அந்த மாநில காங்கிரஸ் அரசுக்கு சிறுபான்மையின ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மக்கள் வரிப்பணத்தை சுரண்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மகராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெங்காய உற்பத்தி அதிகமாக உள்ளது. வெங்காயத்தை யார் பதுக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் மத்திய அரசு உள்ளது என்று மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago