முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிண்டால் கோவுக்கு சுரங்கம் ஒதுக்கியது ஏன்? பரேக் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத், அக். 28 - ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிசாவில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டது ஏன் என்பது கோப்புகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்று நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் கூறினார். 

ஒடிசாவில் உள்ள தலபிரா 2,3 சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனமான ஹிண்டால்கோவுக்கு இந்த சுரங்க ஒதுக்கீடு முதலில் மறுக்கப்பட்டதாகவும், பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிர்லா ஆகியோர் முறையிட்ட பின் முடிவு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் முடிவு மாற்றப்பட்டதற்கான காரணம் எதையும் பி.சி. பரேக் குறிப்பிடவில்லை என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறிய பரேக், இந்த விவகாரம் தொடர்பாக எல்லா விவரங்களும் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை நாங்கள் ஏன் மாற்ற வேண்டும். இது குறித்தும் கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹிண்டால்கோ நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதமர் அனுப்பிய குறிப்பை சுரங்க ஒதுக்கீடு செய்யும் தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. தேர்வு குழுவுக்கு தலைவர் என்ற முறையில் தேர்வு குழுவில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து அறிவேன். மேலும் தேர்வு குழு என்பது முடிவெடுக்கும் அமைப்பல்ல. பரிந்துரைக்க மட்டுமே தேர்வு குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இறுதி முடிவு செய்வது அரசுதான் என்றார்.

சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் இருந்து உங்கள் பெயரை நீக்க கோரி நீதிமன்றத்தை அணுகுவீர்களா என்று கேட்ட போது, அது போன்ற திட்டம் ஏதும் இல்லை என்றார் பரேக். நிலக்கரி துறை முன்னாள் அமைச்சர் சிபுசோரனின் கடிதம் குறித்து கேட்டதற்கு, என்னை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் விரும்பினார். அதற்கான பதிலை அமைச்சரவை செயலருக்கான கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன் என்றார். தனது உத்தரவுகளை பரேக் மதிக்காததால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என சிபுசோரன் தனது கடிதத்தில் கோரியிருந்தார். தனக்கு சரி என்று தோன்றியதையும், பொதுநலன் சார்ந்தது என்று தோன்றியதையும் அமைச்சருக்கு எடுத்து கூறுவது தனது கடமை என அமைச்சரவை செயலருக்கு எழுதிய கடிதத்தில் பரேக் குறிப்பிட்டிருந்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago