முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா - பாக்., அத்துமீறல்களை சமாளிக்க புதிய திட்டங்கள்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.29 - சீனா, பாகிஸ்தான் அத்துமீறலை சமாளிக்க எல்லையை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் 14 ரயில் வே பாதைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் சீனா, பாகிஸ்தான் பகுதியில் உள்ள இந்திய எல்லைக்கு விரைவாக ராணுவ வீரர்களையும், தளவாட சாமான்களையும் கொண்டு செல்லமுடியும். இந்த 14 திட்டங்களில் இது வரை 12திட்டங்களுக்கு சர்வே பணி முடிந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ராணுவ ராயில் பாதையானது ஜம்மு_காஷ்மீர் அருணாசல பிரதேசம் உத்தரகாண்ட் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. இந்திய ரயில்பாதையை ஒட்டி 73 சாலைகள் அமைக்கப்படுகின்றன. இச்சாலைகளின் மொத்த தூரம் 3,812 கி.மீட்டராகும். இவற்றில் 61 சாலைகள் 3,404 கி.மீட்டராகும் என எல்லைப்புற சாலை அமைப்பு தெரிவிக்கிறது. இவற்றில் அருணாசல பிரதேசத்தில் 27_ம், ஜம்மு காஷ்மீரில் 12_ம் உத்தரகாண்டில் 14_ம், இமாசலப்பிரதேசத்தில் 12_ம், சிக்கிமில் 3_ம், என சாலைகள் அமையும். 73 சாலைகளில் 12_ஐ மத்திய பொதுப்பணித்துறை அமைக்கிறது. எல்லைப்பகுதியில் ராணுவ கட்டமைப்புத்துறையில் சீனா சிறந்து விளங்குகிறது. 1962_ம் ஆண்டு போருக்கு பின்னரே இந்தியா காலதாமதமாக இக்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்தது. இது அர்சாங்கங்களின் சேகரிப்பு தோல்வி என்று நாடாளுமன்அறத்தில் கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். தற்போது இது தொடர்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் இந்த விஷயத்தில் இந்தியாவைக் காட்டிலும் சீனா சிறப்பான நிலையில் எல்லைக் கட்டமைப்பில் உள்ளதை மறுப்பதற்கில்லை. அதே சமயத்தில் கடந்து விட்ட காலத்தை புறம் தள்ளுவோம். கடந்த 10 ஆண்டுகளில் சீன எல்லையை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் கட்டடங்கள். சாலைகள், இரு மலைக் கோட்டங்களில் விமான ஓடுதளங்கள், சமதளப்பாதைகள், மேம்படுத்தப்பட்டுள்ளன. கூடுமான அளவுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இந்தியா மேற்கொண்டிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்