முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வீச்சில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி காயம்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,அக்.29 - கேரளாவில் கல்வீச்சில் முதல்வர் உம்மன் சாண்டி காயமடைந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் முன்னாள் அமைச்சசர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்ய்பபட்டனர். 

கேரளமாநிலம் கண்ணூரில் போலீஸ் தடகளைப்போட்டி நிறைவு விழா நடந்தது. இதுல்முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து இடது சாரி முன்ணணியினர் போராட்டம் நடத்த குவிந்தனர். இதனிடையே போலீசார் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது உம்மன்சாண்டி அங்கே வந்தார். நாலாபுறமும் இருந்து திடீரென அவரது காரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கார் கண்ணாடிகள் உடைந்து சிதறல்கள் நெற்றியில் பட்டு உம்மன்சாண்டி காயமடைந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். காயத்துடன் உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனையடுத்து தகவலறிந்த காங்கிரசார்  கேரளா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

விழா முடிந்ததும் கண்ணூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட முதல்வர் நேற்று அதிகாலை திருவனந்தபுரத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் தொண்டர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது உம்மன்சாண்டி கூறுகையில் , ஜனநாயக கநாட்டில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது,ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் எல்லை தாண்டிவிட்டது. எனக்கு யாரிடமும் எந்த கோபமும் இல்லை. என் மீது நடந்த தாக்குதலுக்காக யாரும் பந்த் நடத்த வேண்டாம் என்றார். 

பின்னர் அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சி.டி.ஸ்கேன், இசிஜி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒரு நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இதையடுத்து உம்மன் சாண்டி நேற்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுத்தார். இதனிடையே கண்ணூரில் மார்க்சிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீமதி உட்பட ஆயிரத்துகக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இது குறித்து தகவலறிந்த ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி முதல்வரின் உடல்நலம் குறித்து  விசாரித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்