முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏஞ்சலாவின் டெலிபோன் ஒட்டுகேட்பு ஒபாமாவுக்கு தெரியாதாம்!

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,அக்.29 - ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் டெலிபோனை ஒட்டுக்கேட்கும் விவகாரம் தொடர்பாக எதுவும் ஒபாமாவுக்கு தெரியாது என் று அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுகேட்பதாக அதன் முனஅனள் அதிகாரி ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். அதன் பின் அவர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் ஜெர்மனி பிரதமர்  ஏஞ்சலாவின் உட்பட 35 நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டதாக ஸ்நோடன் தகவல் வெளியிட்டார். இதனால் ஐரோப்பிய நாட்டு தலைரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏஞ்சலாவின் டெலிபோன் உரையாடல்களை கட ந்த 2010_லிருந்து அமெரிக்கா ஒட்டுக்கேட்பதாக ஜெர்மன் பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இந்த விவரம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரியும் என்று ஜெர்மனி பத்திரிகை கூறியிருந்தது. இது குறித்து என்.எஸ். ஏ. செய்தி தொடர்பாளர் வான்னிவின்ஸ் கூறுகையில் ஜெர்மனியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கடந்த 2002 ஆண்டு முதலே ஜெர்மனியின் எலக்ட்ரானிக் ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விவரம் அதிபர் ஒபாமாவுக்கு தெரியாது எனறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago