முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய வால்மார்ட் நிறுவனம் முயற்சி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.29 - இந்திய சந்தைக்குள் நுழைய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியை  வால்மார்ட் மீண்டும் தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் தனது பல்வேறு திட்டங்களுக்கு செனட் சபை உறுப்பினர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்க வர்த்தக சங்கங்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டுவதற்காக  அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் நுழைவதற்கான ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரட்டும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஜூலை மாதம் அந்த நிறுவனம் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் இந்தியாவில் நுழைவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்த  நிறுவனம் தனது  முயற்சியை கைவிட்டு விட்டதாகக் கூறப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத்தில் வால்மார்ட் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவுக்குள் நுழைவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் முதலீடு செய்வதற்கான கடுமையான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று வால்மார்ட் நிறுவனம் கோரி வந்தது. 

பாரதி குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் அமைத்துள்ள மொத்த நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்  இந்தியாவில் நுழைவதகற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்