முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியாத்தம் சி.பி.ஐ. எல்.ஏ. தா.பாண்டியனிடம் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 14​ - குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. கு.லிங்கமுத்து தா.பாண்டியனிடம் வாழ்த்துப் பெற்றார். சென்னை: அஇஅதிமுக கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற வேட்பாளர் கு.லிங்கமுத்து சனியன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை கட்சியின் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

இச்சந்திப்பின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.சேதுராமன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளருமான சி.கே.மதிவாணன், நிர்வாகக் குழு உறுப்பினர் டி.லெனின், இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் இரா.திருமலை, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா, குடியாத்தம் மாவட்டச் செயலாளர் ஏ.சி.சாமிகண்ணு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.டி.சுந்தரேசன், துரைசெல்வம், எம்.நந்தி, சி.சுப்பிரமணி, ஆர்.ராமமூர்த்தி, அதிமுக குடியாத்தம் தொகுதி செயலாளர் டி.பிரபாகரன், கே.பி.சுப்பிரமணி, கருணாமூர்த்தி, உத்திரன், ஏஐஒய்எப் குடியாத்தம் நகர தாலுக்கா செயலாளர் எஸ்.மகேஷ்பாபு, செட்டிக்குளம் சிபிஐ கிளைச் செயலாளர் கனகராஜ், தேமுதிக மாவட்டத் துணைச் செயலாளர் புவனேஷ், ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகக் குழு  உறுப்பினர் அம்பத்தூர் ஆர்.துரைசாமி, அம்பத்தூர் நகர செயலாளர் பி.மாரியப்பன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் ஏ.லோகேஷ் மற்றும் நகரத் துணைச்  செயலாளர்  கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.லிங்கமுத்துவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony