முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமானத் தாக்குதலை படமாக்கிய இம்ரான் மனைவி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

  

இஸ்லாமாபாத், அக்.29 - பாகிஸ்தானின் மலைப்பகுதியில், தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஆளில்லா  விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் இறக்கின்றனர். எனவே இந்த ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கூறி வருகிறது. இதை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்_இ_இன்சாப் கட்சியின் தலைவருமான இம்மரான்கானின் முன்னாள் மனைவி ஜெமீமா, அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலை படம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் மலைப்பகுதியில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தும்போது, அப்பாவி பொது மக்கள் இறக்கின்றனர். இதற்கு பாகிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நவாஸ் ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமைவை சந்தித்தபோது ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதை ஒபாமா ஏற்கவில்லை. இந்த விமானத் தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்து விட்டது. 

இந்நிலையில் இம்ரான்கான் மனைவி ஜெமீமா ஒரு ஆவண சினிமாப்படம் எடுத்துள்ளார். அதில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீச்சு நடத்திய முன்னாள் ஆபரேட்டர் பிரான்டன் பிரையந்த், தாய் மற்றும் குழந்தைகளை இழந்த பள்ளி ஆசிரியர் ரபியுர் ரஹ்மான் ஆகியோரது பேட்டி, படங்கள் மற்றும் அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பலியான 16 வயது சிறுவன் தரிக் அஷிஷின் கண்ணீர் கதையும் இடம்பெற்றுள்ளது. 

                                       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்