முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கிழக்கு மும்பை பா.,தொகுதியில் சுப்பிரமணிய சுவாமி போட்டி

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக். 30 - ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவரை மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியில் களமிறக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. 

இந்த தொகுதி சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய இடமல்ல. 1977 மற்றும் 1980 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று இருமுறை எம்.பி.யாகி உள்ளார். 1977 ல் அவர் பாரதீய லோக் தளம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கினார். 1980 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு 2 லட்சம் ஓட்டுக்கள் வாங்கினார். 1985 க்கு பிறகு உ.பி.யில் இருந்து மேல்சபை எம்.பி.யானார். 1998 ல் மதுரை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். மதுரையில் முதலில் அவருக்கு செல்வாக்கு உருவான போதிலும் பிறகு அது மளமளவென சரிந்தது. எனவே சுப்பிரமணிய சுவாமி மீண்டும் மும்பை பக்கம் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. இது குறித்து அவர் கூறுகையில், நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை பா.ஜ.க. மேலிடம்தான் முடிவு செய்யும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்றார். சுப்பிரமணிய சுவாமி களமிறக்க திட்டமிடப்பட்டுள்ள வட கிழக்கு மும்பை தொகுதியில் தற்போது தேசியவாத காங்கிரசின் சஞ்சய் பாட்டீல் எம்.பியாக உள்ளார். இந்த தொகுதியில் பாஜ.க. தலைவர் கீர்த்தி சோமையா நல்ல செல்வாக்குடன் உள்ளார். சோமையா கடந்த 2 தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டார். அவரை போட்டியிட வைக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இநத தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். பா.ஜ.க. தலைவர் ராம்நாயக் அந்த தொகுதியில் தொடர்ச்சியாக 5 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்