Idhayam Matrimony

ஆந்திராவில் பயிர் அழிந்ததால் 6 விவசாயிகள் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

காளகஸ்தி, அக். 30 - வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தது. கடன் வாங்கி பயிர் செய்த 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

பலத்த மழையால் ஆந்திராவில் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மாநிலத்தின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. பயிரிடப்பட்ட 28.43 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். துக்கம் தாங்காமல் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 

குண்டூர் மாவட்டத்தில் அசோக் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் 10 ஏக்கரில் பருத்தி பயிரிட்டிருந்தார். அறுவடை நேரத்தில் ஏற்பட்ட மழையால் பயிர்கள் மூழ்கி அழிந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் இநத துயர முடிவை எடுத்தார். வாரங்கல்லில் 7 ஏக்கர் பருத்தி பயிர் செய்த பத்தையா, அவரது மனைவி உப்பளம்மாள் ஆகியோர் விஷம் குடித்தனர். இதில் உப்பளம்மாள் பரிதாபமாக இறந்தார். கரீம்நகரில் சாயி என்ற விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் 5 ஏக்கரில் கடன் வாங்கி பருத்தி பயிர் செய்திருந்தார். இதே மாவட்டத்தில் பருத்தி பயிர் செய்த லட்சுமி என்ற பெண்ணும், நல்கொண்டாவில் விஜய் என்ற விவசாயியும் தற்கொலை செய்து கொண்டனர். பிரகாசம் மாவட்டத்தில் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி அழிந்த அதிர்ச்சியில் சேக் மவுலாலி என்ற விவசாயி மாரடைப்பால் இறந்தார். ஏற்கனவே மழை வெள்ளத்தால் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்