முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் தொடக்கம்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

துபாய். அக்.31 - ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கும் சமூக பாதுகாப்புத் திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தொடங்கி வைத்தார். 

சர்வதேச அளவில் பணியாற்றும் 50 லட்சம் இந்தியத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு வழங்கவும் நிதியுதவி அளிக்கவும் சமூக பாதுகாப்புத் திட்டத்தை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மகாத்மா காந்தி பிரவாஸி சுரக்ஸா என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. குடியேற்ற சோதனை தேவைப்படும் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்த சமூக பாதுகாப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பவும், இந்தியாவில் அவர்கள் மறுவாழ்வை தொடங்கவும் அவர்களுக்கான ஓய்வூதியம் வெளளிநாடுகளில் பணியாற்றும் காலத்தில் ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்காக இத்திட்டத்தின் மூலம் அரசு சார்பில் தலா ரூ. 1000 ஆண்டு சந்தா செலுத்தப்படுகிறது. பெண் ஊழியர்களுக்குக் கூடுதலாக ரூ.1000 சந்தாவாக செலுத்தப்படுகிறது. 

இவர்களின் சேமிப்பு ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 4, 000 அல்லது அதற்கு மேலாக சேமிப்பவர்களுக்காக சிறப்புச் சந்தாவாக ரூ.900 செலுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தாயகம் திரும்பி இந்தியாவில் மறுவழ்வு தொடங்குபவர்களுக்கு அரசு உதவுகிறது. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பு, உத்தரவாதம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும்  கவனமாக பரிசீலனை செய்து இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்