முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துவரியில் இருந்து தப்பிக்க விவகாரத்து செய்யும் தம்பதிகள்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக். 31 - சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் ஆண் குழந்தைகளை பெறவே விரும்புகின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து விட்டது. ஆகையால் தற்போது திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை ஒருபுறம் இருக்க பல சிரமங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் விவாகரத்தில் முடிகிறது. சமீப காலமாக விவகாரத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் வரை மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டுள்ளனர்.  இதற்கு அங்கு விதிக்கப்பட்டுள்ள அதிகளவிலான சொத்து வரிதான் காரணம் என்று கூறப்படுகிறது. வீடு மற்றும் குடியிருப்புகளை விற்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில் திருமண முறிவு செய்யும் தம்பதியர்களுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்கும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த ஓட்டையை பயன்படுத்தி விவாகரத்து என்ற புதிய யுக்தியை சீன தம்பதியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரணத்தால்தான் சீனாவில் கடந்த 4 ஆண்டுகளை விட விவாகரத்து அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்