முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் இந்திய வம்சாவழி ஆசிரியர் அடித்துக்கொலை

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மெல்பர்ன்,நவ.5 - நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவழியை சேர்ந்த பயிற்சி ஆசிரியர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தீபாவளி திருநாளன்று நடந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் இனக்கலவரம் அடிக்கடி நடக்கிறது. இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையொட்டி ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அன்னிய செலவாணி வருவாய் குறைந்துள்ளது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள நியசிலாந்து நாட்டிலும் இந்திய வம்சாவழியை சேர்ந்த பயிற்சி ஆசிரியர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று மத்திய ஆக்லாந்து பகுதியில் உள்ள ஒரு விரைவு உணவு (பாஸ்ட் புட்) ஓட்டலில் பயிற்சி ஆசிரியர் தரூண் அஸ்தானா சாப்பிட்டு விட்டு வெளியேறி நண்பர்களுடன் நடந்து வந்துகொண்டியிருந்தார். அப்போது அவர் தாக்கப்பட்டார். இதில் மயக்கமடைந்த தரூண் ஆக்லாந்து நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பயன் இல்லாமல் மரணமடைந்தார். அவரின் உயிர் பிரிந்தபோது தரூண் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர் என்று மெல்பர்ன் நகரில் இருந்து தகவல்கள் கூறுகின்றன. இது உண்மையோ அல்லது பொய்யோ யாருக்குத் தெரியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்