முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் ஒழுங்கு-மின்வெட்டை சரிப்படுத்த முன்னுரிமை தரப்படும்-ஜெயலலிதா பேட்டி

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே - 16 - தமிழகத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், பொருளாதாரத்தை சரிசெய்யவும், மின்வெட்டை சரிப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:​ நீnullங்கள் ராஜ்பவனுக்கு வருகைதந்தது பற்றி...?
பதில்:​நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.
கேள்வி:​தமிழக மக்களுக்கு nullநீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
பதில்:​இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவிதத்திலும் அச்சப்படத் தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.
கேள்வி:​சோனியாகாந்தி தங்களை தேநீnullர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?
பதில்:​எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலைபேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கேள்வி:​நீnullங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
பதில்:​ஏற்கனவே கடந்த 13-ந் தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.
கேள்வி:​மீண்டும் கேட்கிறோம், உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்?
பதில்:​முதலாவதாக தமிழ்நாட்டில் சட்டம்​ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதைக்கு தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்துவோம்.
கேள்வி:​எப்போது nullநீங்கள் டெல்லி செல்வீர்கள்?
பதில்:​முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.
கேள்வி:​பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:​இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.
கேள்வி:​பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?
பதில்:​நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.
கேள்வி:​எப்போது பதவி ஏற்பு விழா நடைபெறும்?
பதில்:​இது குறித்து அரசு தரப்பில் தலைமைச்செயலாளர் முறையாக அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தலைமை செயலாளர் மாலதி நிருபர்களிடம் கூறியதாவது:-​ நாளை (இன்று) பகல் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் முதல்​அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago