முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் 26 வீடுகள் இடிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா,நவ 6 -  வங்கதேசத்தில் ஹிந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் மர்மக் கும்பல் புகுந்து 26 வீடுகளை இடித்து தள்ளியது.

 பாப்னா மாவட்டம் சந்தியா தாலுகாவில் போனோகிராம் என்ற கிராமத்தில்  ஒரு சிறுவன் மத நிந்தனை செய்ததாக பரவிய தகவலால் மர்மக் கும்பல் கடந்த சனிக்கிழமை இச் சம்பவத்தில் ஈடுபட்டது. மேலும் ஹிந்துக் கடவுள் சிலைகளைச் சேதப்படுத்தியதுடன் வலுக்கட்டாயமாக 150 குடும்பத்தினரையும் அந்தக் கும்பல் கிராமத்தை விட்டு வெளியேற்றியது. இது குறித்து அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து காவல்துறை தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்,சிறுபான்மையின ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதலைத் தடுக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே சம்பவம் நிகழ்ந்த கிராமத்திற்கான காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ரிஸெளல் கரீம் கூறுயதாவது, ஹிந்துக்களின் வீடுகளை இடித்த சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாள்களில் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் பலரைத் தேடி வருகிறோம். தற்போது நிலைமை சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago