முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்புக்கு ஜாமீன்: பாக். நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ 6 - கடந்த 6 மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனிடையே முஷாரப் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் சிவப்புமசூதி தாக்கப்பட்டதில் மதத் தலைவர் ரஷீத்தும் அவரது தாயாரும் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி முஷாரப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட மற்றும் செஷனஸ் நீதிபதி தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு பிணைத் தொகை பத்திங்களைச் செலுத்தி ஜாமீன் பெற உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் தாரீக் அசாத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் நாடு திரும்பிய முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேநசீர்புட்டோ கொலை வழக்கு,பலூச் தலைவர் அக்பர் புக்டி கொலை வழக்குகளில் முஷாரப் கைது செய்யப்பட்டு அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டார். பேநசீர் புட்டோ கொலை வழக்கில் முதலில் முஷாரப்புக்கு ஜாமீன் கிடைத்தது. பின்னர் பலூச் தலைவர் கொலை வழக்கில் கடந்த மாதம் ஜாமீன் பெற்று விடுதலை ஆக இருந்த நிலையில் சிவப்பு மசூதி தாக்குதல் வழக்கில் முஷாரப் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

 2007-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் அதிபராகவும், ராணுவத் தளபதியாகவும் இருந்த முஷாரப் பாகிஸ்தானில் உள்ள சிவப்புமசூதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாக கூறி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அதில் மதத் தலைவர் ரஷீத் அவரது தாயார் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷீத்தின் மகன் நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர் முஷாரப் மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்