முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நார்வேயில் கத்தி முனையில் பஸ்சை கடத்தி 3 பேர் கொலை

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஆஸ்லோ,நவ.6 - நார்வேயில் கத்திமுனையில் பஸ்சை கடத்தி டிரைவர் உட்பட 3 பேரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 

நார்வேயில் ஆசாமி ஒருவன் பஸ்சை கடத்தி செல்வதாகவும் டிரைவரை கத்திமுனையில் மிரட்டுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்லோ நகருக்கு அருகே சாங் என்ற இடத்தில் உள்ள அருவிக்கரைக்கு ஆசாமி ஒருவன் பஸ்சை கடத்தி சென்றது தெரிய வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். உடனிடியாக போலீசாரும் பாதுகாப்பு படையினரும் ஹெலிகாப்டர் விமானத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

அங்கு பஸ்சை ஆயுதமுனையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆசாமி பஸ் டிரைவரை கழுத்தறுத்து கொன்றான். மேலும 2 பயணிகளையும் குத்திக் கொன்றான். அதிர்ச்சி அடைந்த போலீசார் பஸ்சுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஆசாமியை மடக்கினர். சுமார் 50 வயது நிரம்பிய அந்த ஆசாமி ஏதற்காக பஸ்சை கடத்தி 3 பேரை கொன்றான் என்று தெரியவில்லை. இது குறித்து ஆஸ்லோ போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமைதிக்காக நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டில் நடந்த இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago