முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க போர்க் கப்பலுடன் நாளை முதல் இந்தியா பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.6 - இந்திய கடற்படையுடன் கூட்டாக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 320 வீரர்களைக் கொண்ட அமெரிக்க போர்க்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. நாளை முதல் பயிற்சி நடக்கிறது.

இந்திய கடற்படை வீரர்கள், பல்வேறு நாட்டு கடற்படையுடன் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பற்றிய பயிற்சியும் அடங்கும்.அந்த வகையில் மலபார் என்ற கூட்டுப்பயிற்சியை சில ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் கூட்டுப்பயிற்சிக்காக அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மெக் காம்பெல் என்ற போர்க்கப்பல் சென்னைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் போர்ப்படையில் நீண்டகாலமாக சிறப்பாகப் பணியாற்றியவர் மெக் காம்பெல். இரண்டாம் உலகப்போரிலும் அவர் <டுபட்டிருக்கிறார். எதிரி நாட்டு போர் விமானங்களை அதிக அளவில் சுட்டு வீழ்த்திய பெருமை மெக் காம்பெலுக்கு உண்டு.அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த போர்க்கப்பலுக்கு மெக் காம்பெல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக்கப்பலின் கேப்டன் பால் லயான்ஸ், கமாண்டர் கால்பி, சென்னையில் உள்ள அமெரிக்காவுக்கான துணைத்தூதர் ஜெனீபர் மெக் இன்டைர் ஆகியோர் நிருபர்களுக்கு கப்பலில் வைத்து கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:_

இந்தக்கப்பலில் 320 வீரர்கள் உள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஆயுதங்களும் உள்ளன. பாதுகாப்பு, போர் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் இங்கு உள்ளன. இவற்றுக்கான கூட்டுப்பயிற்சி நடத்தப்படும்.இந்திய கடற்படையுடனான கூட்டுப்பயிற்சி என்பது, அமெரிக்கா, இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதாகும். அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இடையே இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

வரலாற்று சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் பெற்ற நாடு இந்தியா. இங்கு கூட்டுப்பயிற்சி பெறுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கலாசாரம், நட்பு, ராணுவ வலிமைகள் போன்றவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கு இந்த பயிற்சி உதவும்.கூட்டுப் பயிற்சியின் போது நடத்தப்படும் ஆயுதப்பயிற்சி பற்றி வெளிப்படையாக நாங்கள் கூற முடியாது. எதிரிகளின் விமானங்கள், நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்குவதற்கான பயிற்சி, கடலில் தத்தளிக்கும் மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது, அதற்கான கருவிகளை பயன்படுத்துவது போன்றவை இந்தப் பயிற்சியில் இடம்பெறும்.

இந்திய கடற்படை சார்பில் இந்தப் பயிற்சியில் இரண்டு போர்க் கப்பல்கள் ஈடுபடவுள்ளன. 7_ந்தேதி தொடங்கும் பயிற்சி 11_ந்தேதி நிறைவடைகிறது. சர்வதேச கடல் பகுதியில் இந்த கூட்டுப்பயிற்சி நடைபெறும்.முன்னதாக நாங்கள் அழகுமிகும் சென்னையை சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். குழந்தைகள் மையங்களுக்குச் செல்ல இருக்கிறோம். சில சமுதாயப் பணிகளிலும் <டுபடலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல இந்திய கடற்படையுடன் நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையில் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட இருக்கிறோம்.

இந்த கப்பல், அமெரிக்காவின் 7_வது படைப்பிரிவைச் சேர்ந்தது. 2001_ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011_ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, அங்கு மீட்புப் பணிக்காக முதலில் சென்றது இந்தக் கப்பல்தான்.வீடு, உடமைகளை இழந்து நின்ற அந்த நாட்டு மக்களுக்கு, இந்தக் கப்பலைச் சேர்ந்த வீரர்கள் அனைவருமே, உடுத்திருந்த சீருடை தவிர தங்களுக்கான மற்ற உடைகள், உணவுகள் அனைத்தையும் வழங்கினர். போர்க்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட திருப்தியைவிட, சுனாமி மீட்புப் பணியில் கிடைத்த திருப்திதான் எங்களுக்கு நிறைவைத் தந்தது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது அவர் உருக்கமாகக் கூறியதாவது:_சுனாமி மீட்புப் பணியில் ஈடுபட்ட எங்களைப் பாராட்டி காகிதத்தால் ஆன கொக்கு பொம்மையை, ஜப்பான் மொழியில் கையெழுத்திட்டு அந்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். அதை பத்திரமாக கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கிறோம்.எங்களுடன் பணியாற்றி மரணமடைந்த வீரர்களையும் நாங்கள் மறக்கவில்லை. ''நீங்கள் மறக்கப்படுவதில்லை'' என்ற கறுப்புக் கொடியை அவர்களுக்கென்று வைத்திருக்கிறோம். சாப்பாட்டு அறையில் அவர்களுக்கென்று தனி மேஜையையும், தட்டு தம்ளர் போன்றவற்றையும் வைத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கப்பலில் அதி நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 360 டிகிரி கோணத்திலும் சுழன்று தாக்கும் மிகப் பெரிய பீரங்கிகள் உள்ளன. மேலும், துல்லியமாகக் கணிக்கும் ராடார் கருவிகள், வகைவகையான தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ராக்கெட்டுகள் ஏராளமாக உள்ளன.இந்த கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட போர் விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 510 அடி நீளம், 66 அடி அகலம் கொண்ட அந்தக் கப்பல், அதிகபட்சமாக மணிக்கு 30 கடல் மைல் என்ற வேகத்தில் செல்லக்கூடியதாகும். அந்தக் கப்பலில் எந்த இடத்தில் தடவிப்பார்த்தாலும் தூசி ஒட்டாது. அந்த அளவுக்கு மிகுந்த சுத்தமாக கப்பலை அமெரிக்க வீரர்கள் பராமரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த போர்க்கப்பலில் உள்ள 320 வீரர்களில் 21 சதவீதம் பேர் பெண்கள். இவர்களும் ஆண்களுக்கு நிகராக போர்ப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்