முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி..யில் எம்.பி.பி.எஸ். அட்மிஷனில் ஊழல்: திக்விஜய்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.5 - மத்தியப்பிரதேச மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். அட்மிஷனில் நடந்துள்ள முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது. முதல்வராக சிவராஜ் சிங் சௌகான் இருக்கிறார். இந்த மாநிலத்தில் வருகின்ற 25_ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்தநிலையில் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த முறைகேட்டில் முதல்வர் சௌகான் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் திக்விஜய்சிங் கடுமையாக குற்றஞ்சாட்டி இருப்பதோடு இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். மார்க் குறைவாக எடுத்துள்ள மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மார்க் அதிகமாக எடுத்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கவில்லை என்றும் சிங் கூறியுள்ளார். இந்த முறைகேட்டில் முதல்வர் சௌகான் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதை நிரூபிக்க தொழில்கல்வி இயக்குனருக்கு வந்த தொலைபேசிகளை பரிசோதித்து பார்த்தால் தெரிந்துவிடும் என்றும் திக்விஜய்சிங் மேலும் கூறியுள்ளார். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் திக்விஜய்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்