முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸி. அணியில் மீண்டும் ஹஸ்சே

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

மெல்போர்ன், பிப். 24 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹஸ்சே மீண்டும் இடம் பிடி ப்பாரா? என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பேட்ஸ்மேனான ஹஸ்சே இடம் பெற்று இருந்தார். ஆனா ல் காயம் காரணமாக அவர் கடைசி நேரம் அணியில் இருந்து நீக்கப்ப ட்டார். 

சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஹஸ்சே நீக்கப்ப ட்டதால் அவருக்குப் பதில் பெர்குன்சன் அணியில் இடம் பிடித்தார். இதனால் ஹஸ்சே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பத்திரிகை செய்திகள் வெளியாயின. 

முன்னணி வீரரான ஹஸ்சே ஓய்வு செய்தி குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் கேட்ட போது, இந்த செய்திக்கு நிர்வாகம் மறுப்பு தெ ரிவித்தது. இது தவறான தகவல் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவரான சேப்பல் இந்த செய்தியை மறுத்து இருக்கிறார். தவிர, ஹஸ்சே உள்நாட்டுப் போட்டிகளில் தற் போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், உலகக் கோப்பை போட்டியில் ஹஸ்சேயை மீண்டும் சேர்க்க எனகக்கு விருப்பம் தான். ஆனால் ஐ.சி.சி.யின் விதிமுறைகளின்படி யாராவது ஒரு வீரர் காயம் அடைந்தால் தான் ஹஸ்சேயை மீண்டும் அணியில் சேர்க்க முடியும் என்றும் சேப்பல் தெரிவித்தார். 

முன்னணி வீரரான ஹஸ்சே பிரச்சினை குறித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ட போது, ஹஸ்சேயை உலகக் கோப்பையின் பிற்பகுதியில் சேர் த்தால் எங்களுக்கு சந்தோசம் தான் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்