முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய விசா திட்டத்தை பிரிட்டன் கைவிட்டது

புதன்கிழமை, 6 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.7 - பிரிட்டனில் விசா பெற 3 ஆயிரம் பவுண்டு (ரூ.3லட்சம்) பிணைத் தொகை செலுத்தும் புதிய திட்டத்தை பிரிட்டன் அரசு கைவிட்டுள்ளது. இந்தியாவை குறிவைத்து இத்திட்டம் ஏற்படுத்தப்படவில்லை. சில ஆசிய மற்றும்  ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிந் வருகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 3_வது முறையாக நவம்பர் 14_ம் தேதி இந்தியாவுக்கு காமரூன் வர உள்ள நிலையில் அந்த நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கேமரூன் புதிய விசா திட்டம் அரசு பரிசீலனையில்தான் இருந்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கவில்லை. இந்திய மக்கள் பிரிட்டனுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம் என்றார். பிரிட்டனின் குறைந்த கால விசா திட்டத்தின்படி இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளை ஆபத்து நிறைந்தவைகளாகக் கருதி  இத்தகைய நாடுகளிலிருந்து வருபவர்களை குறைக்க வேண்டும். பிரிட்டனுக்கு வருவதற்கு முன்னதாக விசாவுக்கான பி+ணைத்தொகை 3000 பவுண்டு செலுத்த வேண்டும். தொகையை செலுத்தத் தவறினால்   நாடு திரும்பும்போது அந்தத் தொகை பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்கப்பட்டிருந்தது. 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்