முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: பிரதிநிதி பேச்சு

புதன்கிழமை, 6 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

  

நியூயார்க், நவ.7  - ஐக்கிய நாடுகள் சபையின் பொது பேரவை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்ச+யை எழுப்ப  முயன்ற பாகிஸ்தானின் பேச்சு அவசியமற்றது என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது  என்றும் கூறிய இந்தியா அதை நிராகரித்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மசூத்கான், ஐ.நா.பேரவையின் 3_வது கூட்டத்தில் பேசும்போது, இந்த பிரச்சனையை அவர் பேசினார். அவர் மேலும் பேசியதாவது: 

காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அதை தீர்மானித்துக்கொள்வது அன்த மாநில மக்களின் உரிமை என்பதுதான் பாகிஸ்தான் அரசின் நிலைப்பாடு. தீவிரவாதத்தின் மையம் பாகிஸ்தான் என்று இந்திய பிரதமர் இந்த அவையில் தெரிவித்திருந்தார். அது தவறு. ஜம்மு_காஷ்மீர் மாநில மக்களின் போராட்டத்தை தீவிரவாதமாகவோ அந்த மாநில பிரச்சனையை ஐ.நா.வில் எழுப்புவதால் பாகிஸ்தானை தீவிரவாத மையமாகவோ சித்தரிக்கக் கூடாது என்றார். இதையடுத்து இந்திய பிரதிநிதி ராஜீவ் எம்.பி. பேசியதாவது: 

பாகிஸ்தான் பிரதிநிதியின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. இந்த சபையில் ஜம்மு_காஷ்மீர் பிரச்சனையை எழுப்புவது அவசியமற்றது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்பதை உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். மனித உரிமை மீறல்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதிக்க கூடிய இந்தக் கூட்டத்தில் பாலஸ்தீன மக்களிந் சுய நிர்ணய உரிமை குறித்து பேச வேண்டியுள்லது என்றார். 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்