முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி ரூபாய்க்கு காந்தியின் ராட்டை ஏலம்

புதன்கிழமை, 6 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

லண்சன், நவ.7 - காந்தியின் ராட்டை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 1931_ம் ஆண்டு டிசம்பரில் நடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசதால் கைது செய்யப்பட்டு புனே எரவாடா சிறையில்  அடைக்கப்பட்டார். அப்போது அவர் தனது கைராட்டையில் நூல் நூற்றார். பின்னர் அதை அமெரிக்காவை சேர்ந்த சமூக சேவகர் பிளோட் ஏ பப்பர் என்பவருக்குப் பரிசாக வழங்கினார். அந்த ராட்டை சமீபத்தில் லண்டனில் உள்ள ஷோரோப்ஷயர் மையத்தில் ஏலம் விடப்பட்டது. 

அந்த ராட்டை ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடமிக அதிகமாகும். இதை அந்த மைய இயக்குநர் ரிச்சர்ட் வெஸ்ட்வுட் புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்