முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரங்கம் பிறப்பிடம் இந்தியா: ஆனந்துக்கு முதல்வர் புகழாரம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.8- உலக செஸ் போட்டியை  சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, 1500 ஆண்டுகள் பழமையான சதுரங்க போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,

இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த அதில் முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.

உலக செஸ் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்புத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் தலைமை உரையாற்றினார். 

பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:_

சதுரங்க போட்டியின் தங்க சகாப்தம் என்று கூறும் அளவுக்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக நடக்கும் இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவு ஜிவிகளின் விளையாட்டாக கருதப்படும் சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகவும் பெறுமைப்படுகிறோம். 

விளையாட்டுகளில் தேசிய விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயமாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது. மூளையின் ஜிம்னாசியமாக திகழும் சதுரங்க போட்டி என்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகும். ஆடுபரையும், பார்ப்பவரையும் மிகவும் கவர்ந்த இந்த விளையாட்டின் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். 2011ம் ஆண்டில் என்னை உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் சந்தித்தபோது சென்+னில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதற்கு நான் சம்மதித்து 20 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கினேன். ரஷ்யா இந்த போட்டியை நடத்த முன்வந்து தோல்வி கண்டது. ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக தமிழக அரசின் விருப்பத்தின் பேரில் இந்த உலக செஸ் போட்டி எந்தவித குலுக்கலும், ஏலமும் இல்லாமல் சென்னையில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 29 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிகாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகாக வந்த அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த சதுரங்க விளையாட்டு தோன்றியுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது போன்ற விளையாட்டு நடந்திருந்திருப்பதை அறிகிறோம். இந்த ஆச்சர்யமான விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என்பதில் நான் பெருமையாகக் கூறமுடியும்.

கடந்த காலங்களில் போர்களத்தில் இருதரப்பு ராணுவமும் நேருக்கு, நேர் நின்று மோதும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு அரங்கேறியுள்ளது. மகா கவிஞர் காலதாசர் இயற்றிய ரகுவம்சம் என்ற புராதான நூலில் இத்தகைய சித்திரம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் சதுரங்க போட்டியின் புகழ் 12 மற்றும் 15 நூற்றாண்டிற்கிடையே இருப்பதை அறிகிறோம். கி.பி. 1200 மற்றும் 1400 ஆண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தில் இந்த விளையாட்டு மிகவும் புகழ்பெற்றுள்ளது. 17 ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு இத்தாலியில் மிகவும் பிரபலமாகி வலுமையான வீரர்கள் உருவாகியுள்ளனர். 18 நூற்றாண்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனியில் இந்த விளையாட்டு புகழ்பெற்றுள்ளது. அப்போது இந்த விளையாட்டில் மிகவும் திறமையும், புகழும் வாய்ந்தவராக பிரெஞ்ச் வீரர் ஆன்ட்ரி பில்டோர் திகழ்ந்து 40 ஆண்டு காலத்திற்கு முன்னோடியாக தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருந்தார். நவீன கால செஸ் போட்டியின் முன்னோடி ஆட்டம் லண்டனில் நடந்தது. ஜெர்மனி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியில் வெற்றிபெற்றார். அதை யொட்டி உலக செஸ் மாஸ்ட்டராக திகழ்நதார். இந்த உலக செஸ் சாம்பியன்களாக அலக்ஸ்சாண்டர் அலிக்னி, ஜோஸ் ராவுல், கபலன்கா, டீகரன்பெட்ரோஸியன், போரிஸ் செபாஸ்கி, பாபி பிஷர், ஆனடோலி கார்போவ், கேரிகாஸ்பரோவ், விளாடிமீர் கார்னிக் மற்றும் நமது விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டு குறிப்பாக சென்னையில் புகழ்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் முலமாக  ஏராளமான ரசிகர்களும் திறமையாளர்களும் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர். 

மூன்று முறை நடந்த என்னுடைய ஆட்சியின் மூலம் இந்த விளையாட்டுக்காக சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக 111.53 கோடி ரூபாய் இருமடங்காக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சியில் விளையாட்டுக்காக உள்கட்டமைப்பு திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹாக்கி மைதானம், டென்னிஸ் ஸ்டேடியம் போன்றவை சென்னை நகரின் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் 7_வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழக அரசு நடத்தியது. நேரு உள்விளையாட்டு அரங்கை உலக தரத்திற்கு மாற்ற 33.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் 4.50 கோடி ரூபாய் புதுப்பிதற்கும் புதிய வசதி மேம்படுத்துவதற்கும் செலவிடப்பட்டுள்ளது. இப்படி என்னிருந்த பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக 2004ஆம் ஆண்டு இதற்கென்று தனியாக "தமிழ்நாடு உடற்கல்வி  மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்'' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்  2.2 கோடிரூபாய் மதிப்பில் அங்கு விளையாட்டு விஞ்ஞான மையத்தை உருவாக்கவும் 9.98 கோடி ரூபாய் மதிப்பில் மானிய தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் எளிமையான மிகசிறந்த வீரராவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உலக கிராண்ட்டு மாஸ்டர் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். 16_வது வயதிலேயே அவர் முதல் தேசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து  இரண்டு முறை அந்த பட்டத்தை வென்றார். 1987ல் உலக ஜூனயர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று, சாதனை படைத்தார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1988ல் சர்வதேச செஸ் போட்டியில் வென்று முதல் கிராண்ட் மாஸ்டரானார். அவருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. இதையடுத்து அவர் 1993ல் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று முறை  உலக செஸ் சாம்பியனாக அவர் திகழ்ந்து வருகிறார்.

நார்வேயில் மிகவும் புகழ்பெற்ற மார்கனஸ் கார்லஸன் சிறப்பான கிராண்ட் மாஸ்டாராவார். அவரை இங்கு வரவேற்பதில் பெருமைப்படுகிறோம். ஆனந்துக்கு சமமாக காரலஸ்சன் உலக பட்டம் பெறுவதில் மிகச்சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். இந்த போட்டி சிறப்பாக நடக்கும் என்றும் பல ஆண்டுகளுக்கு இந்த போட்டி பேசப்படும் என்றும், பாராட்டப்படும் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கௌரவிக்கும் விதத்தில் செஸ் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதாவை நியமிக்கும் சான்றிதழை பிடே தலைவர் கிர்சன் இல்யும்ழினோவ் முதல்வருக்கு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago