முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் ஆண்டவா் ரஷ்யா செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாடிகன்சிட்டி, நவ:9 -  ரஷ்ய அதிபா் புடின் அழைப்பை ஏற்று, புனித போப் பிரான்சிஸ் முதல் முறையாக வரும் 25ல் ரஷ்யா செல்கிறார். அங்கு வாடிகன் கத்தோலிக்க திருச்சபை, ரஷ்ய ஆா்த்தோடக்ஸ் சா்ச் நல்லுறவு குறித்து இருவரும் பேசுகின்றனா்.

கடந்த 1991ல் சோவியத் யூனியனில் இருந்து ரஷ்யா தனி நாடாக பிரிக்கப்பட்டது. அது முதல் வாடிகன், ரஷ்யா இடையே விரிசல் இருந்து வந்தது. வாடிகன் கத்தோலிக்க திருச்சபை, ரஷ்ய  ஆா்த்தோடக்ஸ் சா்ச் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நல்லுறவை ஏற்படுத்த நீண்ட காலமாக முயற்சி நடந்தது. முன்னாள் போப்கள் பெனடிக்ட், ஜான்பால் ஆகியோருக்கு ரஷ்யா வந்து செல்ல அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆா்த்தோடக்ஸ் சா்ச்சில் இருந்து முறைப்படி  அழைப்பு வராததால் அவா்கள் ரஷ்ய அரசின் அழைப்பை நிராகரித்து விட்டனா். இதற்கு முன்பு போப் பதவி வகித்தவா்கள் ஐரோப்பிய நாடான இத்தாலி, போலந்து,ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளை சோ்ந்தவா்கள். கடந்த 1300 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பியா் அல்லாத பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிதவா்களின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  போப் பிரான்சிஸ் வரும் 25ம் தேதி ரஷ்யா செல்கிறார். இதன் மூலம் ரோம், ரஷ்யாவில் வசிக்கும் கிறிஸ்தவா்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago