முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,நவ.9 - எல்லை தாண்டியதாக இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 4 பேருக்கு ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் நவ.22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

   இலங்கை கல்திரை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களான குருகுல சூர்ய பட்ட பெந்திகே மெரில் திவ்யா(55) முகம்மது அமீர்(48)வெள்ள அரம்பெகே(47)என்டரகே டோன் சுரேஷ் பிரேமகுமார்(30)ஆகிய 4 பேரும் கன்னியாகுமரி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடலோரக் காவல்படையினரால் எல்லை தாண்டியதாக இம்மாதம் 6 ஆம் தேதி கைது செய்தனர்.பின்னர் அவர்கள் 4 பேரையும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் இந்திய கடலோரக் காவல்படை ஒப்படைத்தது.இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வரையும் போலீஸார் ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி(பொறுப்பு)பழனியம்மாள் முன்பு

ஆஜர்படுத்தினர்.   நால்வரையும் விசாரித்த நீதிபதி இவர்கள் 4 பேரையும் இம்மாதம் 22 ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.உத்தரவினையடுத்து போலீஸார் அவர்கள் 4 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்