முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.9 - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர்  டேவிட் கேமரூன் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்  நிராகரித்தார். அவர் இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகி விட்டது.

லண்டன் தமிழர்கள் நடத்திய போராட்டம் எடுபடவில்லை.  இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை காரணம் காட்டி தமிழர்கள் நடத்திய போராட்டத்தை அவர்  ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்ஷே  அரசை கண்டித்து இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்குமாறு தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை சந்திக்க அழைப்பு  விடுத்தார். அதில் உலக தமிழர் பேரவை, இங்கிலாந்து தமிழர் பேரவை ஆகியவை மட்டும் கலந்துகொண்டன. அப்போது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பிரதமர் டேவிட் கேமரூன் ஏற்கவில்லை. நான் இலங்கை செல்வதில் எந்தமாற்றமுமில்லை என்று அவர் தெரிவித்தார். 

காமன்வெல்த் மாநாடடில் நானும், வெளியுறவு அமைச்சர் வில்லியம் கேக்கும் கலந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த மாநாடு மூலம் தாக்கங்களை கொண்டுவர உள்ளோம். ஆனால் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கை மீதான அழுத்தங்களை கொண்டுவர முடியாது. இலங்கையின் போர்ச் செயல்கள் குறித்து வலியுறுத்த முடியாது. எனவே ராஜ தந்திர முறையில் இந்த பிரச்சனையை அணுக வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்