முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் ஏவுகணை: இந்தியா தயாரிக்கிறது

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 16  - சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தயாரித்து குவித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்தியாவும் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அக்னி, பிரமாஷ்,பிருத்வி போன்ற ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே தயாரித்து உள்ளது. சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. தற்போது 5000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் அணு ஏவுகணையை தயாரிக்கும் பணியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. இந்த வகை ஏவுகணையானது எதிரிகளின் ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் நுழையும் முன்பே வழிமறித்து தாக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்