முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்ணைக் கவ்விய தி.மு.க. நிர்வாகிகளின் வாரிசுகள்

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மே.- 16 - நடைபெற்ற 14 வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வின் நிர்வாகிகளின் வாரிசுகள் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளனர். தி.மு.க. என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது இரண்டுதான். ஒன்று ஊழல், மற்றொன்று குடும்ப வாரிசு அரசியல். தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள், தி.மு.க.வின் பெரும் கிளைகளாக உள்ளனர். கட்சிக்காக உயிரை கொடுத்தவர்கள் கட்சி வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர்கள் எவரும் அக்கட்சியில் உயர்ந்த பொறுப்புக்களுக்கு வருவது குதிரைக் கொம்புதான். கருணாநிதி தி.மு.க.வின் தலைவர். அதனால் அவர் முதல்வரானார். அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வர். மற்றொரு மகன் அழகிரி மத்திய கேபினட் அமைச்சர் மட்டுமல்ல, கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளரும் கூட.
மகள் கனிமொழி எம்.பி. மற்றொரு மகன் தமிழரசன், மகள் செல்வி என தனது மகன், மகள்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புக்களை கொடுத்து அழகு பார்த்து மகிழ்ச்சியடைந்து வந்தவர் கருணாநிதி. தனது மகன்கள், மகள்களுக்குத்தான் பொறுப்புக்களா என்று யோசிப்பதற்குள் அவரது பேரன், பேத்திகளுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பொறுப்புகளை கொடுத்தவர் கருணாநிதி.
கருணாநிதியின் வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதை எதிர்ப்பவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது நாடறிந்த உண்மை. கட்சியில் கருணாநிதியின் வாரிசுகள் மட்டும் பொறுப்பில் இருப்பதை கண்ட தி.மு.க. நிர்வாகிகள், அவர்களும் தங்கள் பங்கிற்கு வாரிசுகளை கட்சி பொறுப்பாளர்களாக்கியும் வருகின்றனர். இதனால் மற்ற நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர். நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் தி.மு.க நிர்வாகிகளும், மந்திரிகளும் தங்களது வாரிசுகளுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்தனர். தங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்து விட்டாலும் தங்களது வாரிசுகள் மூலம் தொடர்ந்து செல்வாக்காக இருக்கலாம் என்று நினைத்த நிர்வாகிகள் பலர் இந்த தேர்தலில் தங்களின் மகன்களுக்கு பல கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ சீட் பெற்றனர்.
அதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன், சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் தி.மு.க.. சார்பில் களமிறக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க வேட்பாளர் செல்வம் தோற்கடித்தார். முன்னாள் தி.மு.க. அமைச்சர் என்.வி.என். சோமுவின் மகள் கனிமொழி மாதவரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி படுதோல்வியடைய செய்தார். வருவாய் துறை அமைச்சர் பெரியசாமி மகன் செந்தில் குமார் பழனி தொகுதியில் தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டார். அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் அவரை வென்றார்.
திருநெல்வேலி மேயர் சுப்பிரமணியத்தின் மகன் லெட்சுமணனும் திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக்கப்பட்டார். அவரை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நயினார் நாகேந்திரன் வென்றார். அ.தி.மு.க.வில் சபாநாயகராக இருந்து தி.மு.கவுக்கு தாவி தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் சேடபட்டி முத்தையா மகனும், டி. கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளராக இருக்கும் அவரது மகன் மணிமாறன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். தி.மு.க வில் எம்.எல்.ஏவாக இருந்த போதே அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இன்று வரை தொடர்ந்து அ.தி.மு.க.விலேயே நீடித்து தற்போது மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்ற முத்துராமலிங்கம் திருமங்கலத்தில் போட்டியிட்டார். அவர் தி.மு.க வேட்பாளரை படுதோல்வி அடைய செய்தார். தி.மு.க.வில் வாரிசுகளை எம்.எல்.ஏவாக்கி செல்வாக்கு பெற்று விடலாம், சம்பாதிக்கலாம் என்று நினைத்தவர்கள் எண்ணம் மண்ணோடு மண்ணாகி விட்டது. இந்நிலையில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தட்டுத்தடுமாறி 2,819 ஓட்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது தவிர தி.மு.க. வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மந்திரிகளுக்கும் இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago