முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாகப் பட்டினத்தில் கிரிக்கெட்: சீமாந்திரா போரட்டக்குழு எதிர்ப்பு

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

ராஜமுந்தரி, நவ. 12 - விசாகப்பட்டினத்தில் இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தினால், ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறத்தி போராடி வரும் சீமாந்திரா பகுதி மக்களின் மனம் காயப்படும் என்று  சீமாந்திரா வழக்குரைஞா்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து போரட்டக்குழு இணை ஒருங்கிணைப்பாளா் முப்பால சுப்பாராவ் மேலும் கூறுகையில், "சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் (ஜேஏசி) காகிநாடாவில் சனிக்கழமை நடைபெற்றது. கூட்டத்தின்போது இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் ஒருநாள் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாதம் 23-ஆம் தேதி வரை போரட்டத்தைத் தொடா்வது என முடிவு செய்யப்பட்டது. 24-ஆம் தேதி கடப்பாவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசிடமிருந்து ஒருங்கிணைந்த ஆந்திரம் என்ற  அறிவிப்பு வெளியாகும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும். மேலும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கக்கோரி ஆந்திரத்தைச் சோ்ந்த எம்பிக்களை வலியுறுத்தி உள்ளோம்" என்றார் சீமாந்திராவைச் சோ்ந்த 35,000 வழக்குரைஞா்கள் கடந்த 100 நாள்களாக ஆந்திரத்தை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்