முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு 5-வது இடம்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 12  - ஜப்பானில் நடந்து வரும் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில்

இந்திய அணி 5_ வது இடத்தைப் பிடித்தது. 

ஆடவருக்கான 3_வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் ஜப்பானில் உள்ள சுகாமிரா நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. 

இதில் 5_வது மற்றும் 6_வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. 

ஆட்டம் துவங்கிய 6_வது நிமிடத்தில் இந்தி ய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோதஜித் சிங் கோலாக மாற்றி னார். 

அடுத்த 5_வது நிமிடத்தில் குர்ஜிந்தர் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 24_வது நிமிடத்தில் மந்தீப் சிங் கடத்திக் கொடுத்த பந்தை ஆகாஷ் தீப் சிங் கோலாக மாற்றியதன் மூலம் இந்திய அணி முதல் பாதியில் 3_0 என முன்னி லை வகித்தது. 

தொடர்ந்து அசத்திய ஆகாஷ்தீப் சிங் 40_வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஒரு வழியாக சுதாரித்த ஓமன் அணிக்கு 58_வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. 

இதை முகமது ஹூபைஸ் அல் ஷர் கோலா  க மாற்றினார். ஆட்டத்தின் 66_வது நிமிடத் தில் இந்தியாவின் மாலக் சிங் ஒரு கோல் அடித்தார். 

மேலும் ஆட்டம் முடியும் 2 நிமிடத்துக்கு முன் ஆகாஷ் சிங் மீண்டும் ஒரு கோல் அடிக்க முடிவில் 6_1 என்ற கோல் கணக் கில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பி ல், முன்னணி வீரர்களில் ஒருவரான ஆகா ஷ் தீப் சிங் 3 கோல்களை அடித்து முத்தி ரை பதித்தது குறிப்பிடத்தக்கது. 

ஜப்பானில் நடைபெற்று வரும் இந்த ஆசி ய கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஆசி யாவைச் சேர்ந்த முன்னணி நாடுகள் கோ ப்பைக்காக களம் இறங்கியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago