முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சிக் கோப்பை: தமிழக - மத்திய பிரதேச ஆட்டம் டிரா

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

இந்தூர், நவ. 12 - தமிழகம் மற்றும் மத்திய பிரதேச அணிக ளுக்கு இடையே நடந்த ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. 

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இப்போட்டி வியாழக் கிழமை தொடங்கியது. பத்ரி நாத் இரட்டை சதம் அடித்து கைகொடுத்த தன் மூலம் முதல் இன்னிங்சில் தமிழக அணி 532 ரன் குவித்தது. 

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மத்தி ய பிரதேச அணி தனது முதல் இன்னிங்சி ல் 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்து இருந்தது. 

இதில் மத்திய பிரதேச  அணியைச் சேர்ந்த முன்னணி வீரர்களில் ஒருவரான பண்டெ லா 64 ரன்னும், ஆனந்த் ராஜன் 29 ரன் னும் எடுத்து ஆட்டம் இழக்காம்ல் இருந்தனர். 

நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தமிழக பௌ லர்களை சமாளிக்க முடியாமல் திணறிய மத்திய பிரதேச அணி 269 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 

ம.பி.க்கு எதிரான இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 4 விக்கெட் வீழ்த் தினார். 263 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சை மத்திய  பிரதேச அணி தொடங்கியது. 

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ம.  பி. அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து இருந்தது. இதனால் இந்த ஆட்டம் இறுதியில் டிரா ஆனது. 

ரஞ்சிக் கோப்பை போட்டடியின் மற்றொ ரு ஆட்டம் சண்டிகாரில் நடந்தது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி ன. இதில் மும்பை அணி 180 ரன்கள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago