முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள காங். முதல்வராக உம்மன் சாண்டி வரும் 18-ம் தேதி பதவி ஏற்கிறார்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,மே.- 16 - கேரள மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உம்மன்சாண்டி வருகின்ற 18-ம் தேதி பதவி ஏற்கிறார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சொர்ப்ப மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 72 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இ.கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்தாலும் 68 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்தநிலையில் சொர்ப்ப மெஜாரிட்டியில் வெற்றிபெற்றிருப்பதால் காங்கிரஸ் தலைவர்களில் உம்மன்சாண்டியை முதல்வராக்குவதா அல்லது ரமேஷ் சென்னிதாலாவை முதல்வராக்குவதா என்ற பிரச்சினை எழுந்தது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில் உம்மன் சாண்டி சாதுர்யமாக நடந்து கொள்வார் என்று கூறப்பட்டது. மேலும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டணி உம்மன் சாண்டி முதல்வராகுவதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது உம்மன்சாண்டி காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் முதல்வர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. மேலும் ராமேஷ் சென்னிதாலா முதல்வர் பதவிக்கு போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். சோனியா காந்தியும்,ராகுல் காந்தியும் உம்மன் சாண்டிக்கே ஆதரவு கொடுத்ததாக தெரிகிறது. வருகின்ற 18-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் உம்மன் சாண்டி முதல்வராக பதவி ஏற்கிறார்
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்