முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் தெருக்களில் சிதறிக் கிடக்கும் பிணங்கள்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மணிலா, நவ. 12  - ஹையான் புயல் தாக்குதலால் 10 ஆயிரம் பேர் பலியான பிலிப்பைன்ஸ் தெருக்க ளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சமர், விஸ்தே தீவுகளை ஹையான் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை க் காற்று வீசியது. 

கடலில் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. பலத்த மழையும் கொட்டியது. இவை அனைத்தும் சேர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரத் தாண்ட வமாடி துவம்சம் செய்தன. 

புயல் கரையை கடந்து சென்ற வழியில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழு மையாக அழிந்து விட்டன. 

புயல் தாக்குதலில் விஸ்தே மாகாண தலை நகர் தக்லோபான் நகரம் பலத்த சேதத்துக் குள்ளாகி தரை மட்டமாகிவிட்டது. சூறாவ ளி காற்றில் வீடுகள் அனைத்தும் நொறுங் கின. ஒரு சில கட்டிடங்களே உள்ளன. 

ஹையான் புயல் தாக்குதலுக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அவர் களின் பிணங்கள் தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் சிதறி கிடக்கின்றன. 

கடல் அலை ஊருக்குள் புகுந்ததாலும், மழை வெள்ளம் பெருக்கெடுத்ததாலும் அதில் சிக்கி பலர் இறந்தனர். அவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 

அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பிணங்களை ரோட்டோரங்களில் அடுக்கி வைத்துள்ளனர். 

சில இடங்களுக்கு மீட்பு படையினர் செல் ல முடியாததால் பிணங்கள் அப்புறப்படு த்த முடியாமல் அழுகி துர்நாற்றம் வீசுகின்றது. 

புயல் தாக்குதலில் பிலிப்பைன்சின் 36 மா காணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக் கின்றன. சுமார் 50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களையும் இழந்துள்ளனர். 

இவர்களை தேடி தெருக்களில் அலைந்து திரிகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகு ரலும், சோகமும் எதிரொலிக்கிறது. 

இது ஒரு புறம் இருக்க உயிர் பிழைத்தோர் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இன்றி பரிதவிக்கின்றனர். அவற்றை  பெற தக்லோன் விமான நிலையம் அமைக்கப் பட்டுள்ள முகாமில் நீண்ட கியூ வரிசையி ல் காத்து நிற்கின்றனர். 

பலர் உணவு பொருட்கள் கிடைக்காதா என அல்லாடுகின்றனர். கடைகள் மற்றும் ஓட்டல்களை உடைத்து அவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். 

உணவு கட்டுப்பாடு நிலை தொடர்ந்து நீடித்தால் பசியில் மேலும் பலர் மடியும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

_________________________________________________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்