முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் 29 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 16 மே 2011      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா, மே. - 16  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 29 ரன் வித்தியாசத்தி ல் டெல்லி அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி, ஷான் மார் ஷ் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு பெளலிங்கின் போது, பையூஸ் சாவ்லா மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் நன்கு பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரவீன் குமார், ஹாரிஸ் மற்றும் வல்தாட்டி ஆகியோர் அவர்களுக் கு பக்கபலமாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில், இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசா லா நகரில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கத்தில் 60 -வ து லீக் ஆட்டம் நடந்தது. இதில் கிங்ஸ் லெவன் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் ஆடம் கில்கிறிஸ் ட் மற்றும் வல்தாட்டி இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 170 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
துவக்க வீரர் வல்தாட்டி அதிகபட்சமாக, 50 பந்தில் 62 ரன்னை எடுத் தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் இர்பான் பதான் வீசிய பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்தபடியாக, ஷான் மார்ஷ் 28 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, திணேஷ் கார்த்திக் 19 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். மந்தீப் சிங் 11 ரன்னை எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் இர்பான் பதான் 28 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். ஏ. எம்.சால்வி 40 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, மார்கெல் 1 விக்கெட் எடுத்தார்.
டெல்லி அணி 171 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்னை எடுத்தது.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தர்மசாலாவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 29 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
டெல்லி அணி தரப்பில், துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 29 பந்தி ல்  28 ரன்னை எடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஓஜா 28 பந்தில் 28 ரன்னை எடுத்தார். தவிர, வேணுகோபால்ராவ், மார்கெல் மற்றும் பிர் ட் மூவரும் தலா 16 ரன்னையும், நாகர் 10 ரன்னையும் எடுத்தனர்.
பஞ்சாப் அணி சார்பில், பையூஸ் சாவ்லா 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஸ்ரீவத்சவா 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரவீன் குமார், ஹாரிஸ் மற்றும் வல்தாட்டி ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக சாவ்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago