முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. டென்னிஸ் இறுதி: ஜோகோவிச் - நடால் மோதல்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ. 13 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சும், நடாலும் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான வேர்ல்டு டூர் 

பைனல்ஸ் இங்கிலாந்து நாட்டின் தலைந

கரான லண்டனில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்து உள் ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஏ.டி.பி. வேர்ல்டு டூர் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் சுவிட்சர்

லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல்  நடாலை சந்திக்க இருக்கிறார். 

லண்டனில் நடந்து வரும் இத்தொடரின் அரை இறுதியில் சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா மற்றும் செர்பிய வீரர் ஜோகோவிச் இரு

வரும் மோதினர். 

இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் சிறப்

பாக ஆடி 6_3, 6_3 என்ற நேர் செட் கண

க்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோ

கோவிச் இறுதிப் போட்டடியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். 

மற்றொரு அரை இறுதியில் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரும் மோதினர். 

இதில் ஸ்பெயின் வீரர் நடால் அபாரமாக ஆடி பெடரரை வீழ்த்தினார். எனவே இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நடாலும், 2_ம் இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும் மோத உள்ளனர். 

இறுதிச் சுற்றில் 2 முன்னணி வீரர்களின் வெகு நேர்த்தியான ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்

கும். 

செர்பிய நட்சத்திர வீரரான ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிசுக்குப் பிறகு     

தொடர்ந்து 21 ஆட்டங்களில் வெற்றி பெற்று வருவதால் நல்ல பார்மில் உள்ளார். 

தவிர, தரவரிசைப் பட்டியலில் முதலிடத்

தில் இருந்து தன்னை பின்னுக்கு தள்ளிய நடாலை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக டூர் பைனல்ஸ் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

_________________________________________________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்