முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை துப்பாக்கி: ஹீனா சித்துவுக்கு தங்கம்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 13  - ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப் பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். 

இதன் மூலம் பெண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். 

சர்வதேச துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனியின் மூனிச் நக ரில் நடந்தது. 

உலகின் 10 முன்னணி வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை சித்து பங்கேற்றார். 

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஹீனா தகுதிச் சுற்றில் 384 புள்ளிகளைப் பெற்று 3_வது இடத்

தைப் பிடித்தார். 

இதன் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சீனா வின் குவோவென்ஜன் , செர்பியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் அருனோவிச் ஜோரானா, பல முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைனின் ஒலினா கோஸ்டெலி மற்றும் ஹீனாவுக்கு  இடையே கடும் போ

ட்டி நிலவியது. 

ஹீனா முதல் இரண்டு சுடுதலில் தலா 9.3 புள்ளிகளை மட்டுமே பெற்றார். பின்னர் சுதாரித்து அடுத்தடுத்த சுடுதலில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றார். 

இறுதியில், மொத்தம் 203.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இது உலக சா

ம்பியன் அருனோவிச் ஜோரானா பெற்றதை விட 5.2 புள்ளிகள் அதிகம். 

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படை

த்தார் ஹீனா சித்து. 

இதற்கு முன் இந்தியா சார்பில் அஞ்சலி பகவத் கடந்த 2002 _ம் ஆண்டும், ககன் நரங் கடந்த 2008 _ம் ஆண்டும் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்த

க்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்