முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் செல்ல அனுமதி வழங்க வேண்டும்: முஷாரப்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, நவ.14 -  பாகிஸ்தானின் முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரப் மீது, கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் எமா்ஜென்சியை அறிவித்து, அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 60 பேரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்தது. லால் மசூதியில் பதுங்கிய  தீவிரவாதிகளை ஏவியது, முன்னாள் பிரதமா் பெனசிர் புட்டோ கொலையில் சதி செய்தது  என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பகிஸ்தான் அரசு  கொலை மற்றும் தேசதுரோக வழக்குகளை அவா் மீது பதிவு செய்துள்ளது. இதனால் தோ்தல்  நேரத்தில் லண்டனில் இருந்து திரும்பிய முஷாரப் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இது குறித்து அவரது வக்கீல் ஹலேபோட்டா கூறுகையில், லால் மசூதி வழக்கு, எமா்ஜென்சி வழக்கு உள்பட 4 வழக்குகளில் இருந்தும் ரூ.1 லட்சத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவா் வீட்டு சிறையில் இருந்து வெளியேறினாலும் வெளிநாடு செல்ல நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. எனவே இது தொடா்பாக சிந்து ஐகோர்டில் முஷாரப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் துபாயில் வசித்து வரும்  95 வயதான தனது தாயார் உடல் நலக்குறைவால் அவதிபடுகிறார். எனவே அவரை சென்று பார்த்து வர அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் குறிப்படடுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட  ஐகோர்ட் நீதிபதி ஷஜாத் அலி ஷா வரும்18ம் தேதி மனு மீது மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் இவ்வாறு வக்கீல் ஹலே போட்டா கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்