முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு விளையாட்டு அமைச்சர் பதவி கொடுக்க கோரிக்கை

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சண்டிகார், நவ. 14 - கிரிக்கெட் வீரர் சச்சினை விளையாட்டுத் துறையின் அமைச்சராக நியமித்தால் அனைத்து விளையாட்டுகளின் தரமும் உயரும் என்று பறக்கும் தடகள வீரர் என புகழப்படும் மில்கா சிங் கோரிக்கை விடு த்துள்ளார். 

சண்டிகாரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மில்கா சிங் பேசியதாவது _ விளை யாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சச்சின் நன்கு அறிவார். 

அவரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக நியமித்தால், அந்த பணியில் அவர் திறம்பட செயல்படுவார். 

சச்சின் எம்.பி. யாக இருப்பதால் அவரை விளையாட்டுஅமைச்சராக நியமிப்பதில் மத்திய அரசுக்கு சிரமம் ஏதும் இருக்காது. 

சச்சின் பணிவுள்ளவர், ஒழுக்கானவர், கடுமையாக போராடுபவர். எனவே விளையாட்டு அமைச்சராக அவர் சிறப்பாக  செயல்பட முடியும் என்று மில்கா சிங்         தெரிவித்தார். 

1989 _ம் ஆண்டு அணியில் இடம் பிடித்த போது, அணியின் மேலாளராக இருந்த முன்னாள் டெஸ்ட் வீரரான சந்து போர் டேயும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது _ விளை யாட்டில் இருந்து சச்சின் ஒதுங்கி இருக்க முடியாது. விளையாட்டு அவரது ரத்தத்தில் ஊறியது. 

எதிர்காலத்தில் அவர் விளையாட்டு அமை ச்சராகி அனைத்து விளையாட்டுகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது என் விரு ப்பம். 

சச்சின் எப்போதும் உணர்வுகளைக் கட்டு ப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் விளையா டுவார். பல முறை நடுவர் தவறான தீர்ப்பு அளித்த போதும், களத்தில் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் வெளியேறி உள்ளார். 

ரசிகர்களின் ஆதரவின் மூலம் அவர் நிறைய அனுபவத்திருக்க முடியும். ஆனால் கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம் காரணமாக ஒழுக்கமாக நடந்து வருகிறார். 

சச்சினிடம் இருந்து இளம் வீரர்கள் இதனை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு முன்னாள் வீரர் போர்டே கூறினார்.  

முன்னாள் கிரிக்கெட் வீரரும். பா.ஜ.க. எம்.பி. யுமான நவ்ஜோத் சிங் சித்து கூறு கையில், சச்சின் தனிமனிதர் அல்ல. அவர் ஒரு நிறுவனம். 

கிரிக்கெட் உலகில் அவர் பெயர் எப்போ தும் நினைவுபடுத்தப்படும். சச்சினைப் போல ஒரு வீரர் இதற்கு முன்பும் இருந்ததி ல்லை. இனிமேலும் இருக்கப் போவதில் லை என்று தெரிவித்தார். 

சச்சின் குறித்து ஹர்பஜன் கூறுகையில், சச்சின் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்ப்பது கடினம். ஆனால் நாம் அத ற்கு தயாராக வேண்டும். 

16 ஆண்டுகளுக்கு முன் வலைப் பயிற்சி யின் போது அவருக்கு பௌலிங் செய்தே ன். அப்போது எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் பெறும் திறமை எனக்கு இருப்பதாக தெரிவித்தார். 

சச்சின் எனக்கு அண்ணன் போன்றவர். நல்ல ஊக்குவிப்பாளர் . இவ்வாறு பஞ்சாப் வீரரான ஹர்பஜன் சிங் கூறினார். 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் தெரிவித்ததாவது _ சச்சின் விளையாட்டு அமைச்சரானால் தான் விளையாட்டு மேம்படும். 

அனைத்து வீரர்களையும் அவர் ஒரே மாதி ரி வழி நடத்துவார். 24 ஆண்டு காலம் விளையாட்டில் இருந்ததால் வீரர்களின் தே வையை அவர் நன்கு அறிவார் என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்