முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணை வீடு முறைகேடு வழக்கிலிருந்து மாயாவதி விடுதலை

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

லக்னோ.14 - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான  மாயாவதிக்கு பண்ணை வீடு ஒதுக்கியதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று உத்தர பிரதேச மாநில லோக் ஆயுக்த தெரிவித்துள்ளது.  விதிமுறைகளை மீறி நொய்டாவில் பண்ணை வீடு ஒதுக்கப்பட்டதாக நொய்டா ஆணையத்தின் தலைவராக இருந்த ராகேஷ் பகதூர் உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு புகார் கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச லோக் ஆயுக்த  விசாரணைக்கு மாநில அரசு கடந்த ஆகஸ்ட் மாதம்  உத்தரவிட்டது. இதன் விசாரணை அறிக்கையை உத்தரப்பிரதேச லோக் ஆயுக்த நீதிபதி மொஹபாத்ரா மாநில அரசிடம் வழங் கினார்.

அதில் விதிமுறைகளை மீறி மாயாவதிக்கு பண்ணை வீடு ஒதுக்கப்பட்உள்ளதாகத் தரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் நொய்டா மாஸ்டர் பிளானில் பண்ணை வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மிறைகேடோ அல்லது ஊழலோ நடைபெறவில்லை. முறைகேடு நடைபெற்றதற்கான அடிப்படை ஆ ஆதாரங்கள் இல்லை.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி பண்ணை வீட்டு நிலத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நொய்டா ஆணையத்துக்கு வருவாய் இழப்பீடு ஏற்படவில்லை. மு&றைகேடு நடைபெற்றதற்கான அடிப்படை ஆதாரங்களும் இல்லை.

 நொய்டா ஆணையத்தின் கீழ் பண்ணை வீடு பெறுவதற்காக அனைவரும் சமர்ப்பித்த ஆவணங்களை மாநில அரசு மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.   அதில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் இருந்தால்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பண்ணை வீடுகள் குறித்து மாநில அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்  என்று லோக் ஆயுக்த  நீதிபதி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி மீது நடைபெற்று வந்த  சொத்துக் குவிப்பு வழக்கின் விசார ணையை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ. கூறிய நிலையில் தற்போது பண்ணை வீடு முறைகேடு வழக்கிலிருந்தும் மாயாவதி விடுவிக்கப்பட்டுள்ளார். 

                 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony