முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி வீரர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.14 - கேரள கடல் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  மீன் பிடித்துக்கொண் டிருந்த குமர் மாவட்ட மீனவர்கள் இருவரை அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்குக் கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத் தின் போது இத்தாலி கப்பலில் இத்தாலி கடற் படையைச் சேர்ந்த 6 வீரர்கள் இருந்தனர். இவர்களில் மீனவர்கள் கொலை தொடர் பாக  மாசிமிலோனோ ரத்தோர், சல்வ தோர் ஜிரோன் ஆகிய இருவரையும் கேரள போலீஸார் கைது செய்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவப்படி இந்த வழக்கு  தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இத்தாலி வீரர்கள் இருவரும் ஜாமீனில் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்கியுள்ளனர். 

துப்பாக்கிச் சூடு நடந்தபோது, உடன் இருந்த மற்ற மற்ற 4 வீரர்களும் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.  அவர்களை விசாரிக்க இந்தியாவுக்கு  அனுப்புமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இதனை இத்தாலி ஏற்கவில்லை. இந்திய அதிகாரிகளை இத்தாலிக்கு வருமாறு யோசனை கூறியது. வெளிநாட்டில் பெறப்படும் சாட்சிகளின் வாக்குமூலம் இந்தியக்  கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த காரண த்தால் இந்தியாவில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சாட்சி விசாரணை நடத்த என்ஐஏ முடிவு  செய்தது. இதற்கு இத்தாலியும் ஒப்புக்கொண்டது.

இதன்படி 4 வீரர்களும் ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தனர். அவர் களிடம் டெல்லியிலிகுந்து என்ஐஏ அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  சாட்சி விசாரணை நடத்தினர். டெல்லி மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர்களது                  சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன என்று உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago