முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி சகோதரிகளுக்கு தண்டனை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சிங்கப்பூர், நவ.15 - சிங்கப்பூரில் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி சகோதரி களுக்கு நீதிமன்றத்தில் 15 மாதம் சிறைத் தண்டனை வழங் கப்பட்டது. விக்னேஸ்வரி பசுபதி என்ற பெண்ணுக்கு 24 மாதம் சீர்திருத்தத் தண்டனையும், சிங்கப்பூர் டாலரில் 5 ஆயிரம் அபராதமும் 150 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

திருட்டில்  மூளையாகச் செயல்பட்ட         அவரது மூத்த சகோதரி ராஜேஸ்வரி பசுபதிக்கு 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் அங்குள்ள கிரிக்கெட் பயிற்சிசியாளரிடம் பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிந்தனர். அங்கு பயின்ற ஒரு மாணவரின் பையிலிருந்து சாவியைத் திருடி இவர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கிரிக்கெட் பயிற்சியாளர்  ஜெயராஜ் புவனேசன் என்பவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்