முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமை மீறல் நடந்திருந்தால் நடவடிக்கை: ராஜபட்சே

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

   

கொழும்பு, நவ.15 - இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று அதிபர்  ராஜபட்சே கூறியுள்ளார். மேலும்  இலங்கையை பிரிக்க விடமாட்டேன்.  இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்   ராஜபட்சே கூறினார்.

 கொழும்பு நகரில்  வெளிநாட்டு நிருபர்களிடம் ராஜபட்சே கூறியதாவது:

இலங்கையில் ராணுவம், வாழ்வா, சாவா என்ற நிலையில் விடுதலை புலிகளுடன்  போரிட்டது. போர் முடிந்து தற்போது அமைதி நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் குண்டுவெடிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும் இலங்கையை பிரித்து விட வேண்டும் என்று சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. இலங்கையை ஒருபோதும் பிரிக்க முடியாது. தமிழர்களுக்கு தனிநாடு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

30 ஆண்டுகளாக மனித உரிமை மீறலால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்தது. 2009_ம் ஆண்டுக்குப் பிறகு  குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் இங்கு வந்து நிலைமையை நேரில் அறியலாம். இலங்கையிலிருந்து சென்று வெளி நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்களை இலங்கைக்குத் திரும்ப வருமாறு அழைக்கிறேன். உலக நாடுகளிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இலங்கையில் மனித உரிமைகள் மீறப் படுவதாக ஒரு பேச்சு உள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக எங்களிடம் எந்த ரகசியமும் இல்லை. திறந்த புத்தகத்துடன் இருக்கிறோம் என்று ராஜபட்சே கூறினார்.      

இதனிடையே கொழும்பில் இன்று காமன்வெல்த் மாநாடு தொடங்குதிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லும் வழியில் பிரிட்டிஷ்  பிரதமர் கேமரூன் நேற்று டெல்லி வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். இலங்கைக்கு செல்லும்போது வடக்கு மாகாணத்துக்கு தாம் செல்லப் போவ தாகவும் அவர் தெரிவித்தார். பேச்சு வார்த்தை மூலம்தான் எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 

இதற்கிடையே பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் வடக்கு மாகாணத்துக்கு செல்லக் கூடாது என்று இலங்கை அமைச்சர் கேமரூனை மிரட்டியுள்ளார்.                

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்